கர்ம வீரர் காமராஜர் 118வது பிறந்தநாள் விழாவை கீழ்க்கண்ட தலைப்பில் கிரியேட்டிவ் குழந்தைகள் பேசும் காணொளியை கீழே காணலாம்.
☆ காமராஜர் 2020
☆ காமராஜரை பற்றிய ஒரு முக்கிய நிகழ்வு
☆ காமராஜரின் சாதனைகள்
☆ காமராஜர் வாழ்க்கை வரலாறு
☆ காமராஜரின் பொன்மொழிகள்
காமராஜரின் பல அசாத்திய சாதனைகளில்
ஒன்றான மதிய உணவு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
சிறப்பிக்க மதிய உணவு திட்டம்..
முதலில் எட்டயபுரத்தில்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது . எட்டயபுரம் மன்னர் தொடக்கப்பள்ளியில் பகல் உணவுத் திட்டத்தை காமராஜர்தான் தொடங்கி வைப்பதாக இருந்தது . ஆனால் அன்று அவர் வரமுடியாது போனதால் , காமராஜர் கேட்டுக்கொண்டபடி நெ.து.சு. தொடங்கி வைத்தார் .
அதற்கு அடுத்த நாள் , வைட்பாற்றுப் பாலத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது . அடிக்கல் நாட்டிய #காமராஜர் , பாலத்தைப் பற்றிப் பேசவில்லை . இலவச உணவுத் திட்டத்தைப் பற்றிப் பேசினார் . '
" எதற்காகச் சுதந்தரம் வாங்கினோம் ? எல்லோரும் வாழ . எப்படி வாழணும் ? ஆடு , மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா ? மனிதர்களாக வாழணும் . அதற்கு படிப்பு வேணும் . பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா ? வராது . ஏழைகளுக் கெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே சாப்பாடு போடணும் . அப்பதான் படிப்பு ஏறும் . இதுவே முதல் வேலை . முக்கியமான வேலையும் கூட . ' அன்னதானம் நமக்குப் புதியதல்ல . இது வரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம் . இப்போது பள்ளிக்கூடத்தை தேடிப்போய் போடச் சொல்கிறோம் . அப்படிச் செய்தால் உயிர் காத்த புண்ணியம் ; படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும் . இதை உணர்ந்து இப்பகுதியில் பல ஊர்க்காரர்கள் தாங்க ளாகவே பகல் உணவுத் திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வைத் திருக்கிறார்கள் . இவர்களைப் பாராட்டுகிறேன் , வாழ்த்துகிறேன் . ' ' என் மனத்தில் , எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்போதைக்கு இல்லை . இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன் . எனவே மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஊர் ஊராக வந்து பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன் . ' என்று உணர்ச்சிபூர்வமாக காமராஜ் பேசிய பேச்சு , வரலாற்றில் மறக்க முடியாததாகிவிட்டது .
இத்திட்டத்துக்காக பல சின்னச் சின்ன ஊர்களில் இருந்த பணக்காரர்கள் நிறைய கொடுத்தார்கள் . ஏழைமக்களும் , நடுத்தர வர்க்கத்தினரும் , மாதச் சம்பளம் பெற்றவர்களும் நன்கொடை தந்தனர் . ஆயிரக்கணக்கான ஊர்களில் மக்கள் நாள்தோறும் பிடி அரிசி ஒதுக்கினார்கள் . வாரந்தோறும் அதைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள் . குடும்பப் பெண்களோ , முறைபோட்டுக்கொண்டு சமைத்துக் கொடுத்து உதவினார்கள் .
இப்படியாக , மாநில அரசின் ஆணை வருவதற்கு முன்பே , அரசு சாராத ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்த இந்த இலவச மதிய உணவு வழங்கும் தன்னார்வத் திட்டம் , 3,000 ஊர்களில் தொடங்கப்பட்டது . அரசு நிதியைப் பெறுவதற்கு முன்பே இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 4,400 தொடக்கப் பள்ளிகளில் வேரூன்றி யது . கிட்டத்தட்ட 20,000 குழந்தைகள் பயனடைந்தனர் .
4 comments
Click here for commentsSuper kitties speech
ReplySuper kitties speech
Replykutties speech super
ReplySuper
ReplyConversionConversion EmoticonEmoticon